மாவட்ட செய்திகள்

உப்பிலியபுரம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு + "||" + Theft of jewelery and money at a retired bank officer's house near Uppiliyapuram

உப்பிலியபுரம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

உப்பிலியபுரம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
உப்பிலியபுரம் அருகே ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
உப்பிலியபுரம்,

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் கணேசன் (வயது 65). இவர் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சத்யபாமா(60). கடந்த வாரம் சென்னையில் உள்ள தனது மகனை பார்க்க கணேசன் தனது மனைவியுடன் சென்று விட்டார்.


இந்தநிலையில் நேற்று காலை கணேசனின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர், இதுபற்றி அவருக்கும், உப்பிலியபுரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

திருட்டு

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. இதையடுத்து போலீசார் விசாரணையில், பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்ததும், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க பள்ளம் தோண்டி தடுப்புகள்
பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க மாட்டு வண்டிகள் செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2. கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு: சேலத்தில் 7 வாலிபர்கள் கைது
சேலம் மாநகரில் கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
3. கல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு
கல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 புதுவை போலீஸ்காரர்கள் பணிநீக்கம்
புதுவையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
5. வியாபாரியை கொன்று நகை-பணம் கொள்ளை பத்திரிகை கொடுக்க வந்தது போல் நடித்து மர்ம நபர்கள் வெறிச்செயல்
கும்பகோணத்தில் பத்திரிகை கொடுக்க வந்தது போல நடித்து வியாபாரியை இரும்பு கம்பியால் குத்தி கொன்று நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.