மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தவறான பிரசாரம் + "||" + It is false propaganda that Islamists will be expelled from the country under the Citizenship Amendment Act

குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தவறான பிரசாரம்

குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தவறான பிரசாரம்
குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தவறான பிரசாரம் என காதர் மொகிதீன் கூறினார்.
கும்பகோணம்,

ஒன்றோடு ஒன்று தொடர்புடைய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றாலும் இந்திய மக்களின் குடியுரிமையே கேள்விக்குறியாகி உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் சமயசார்பற்ற கொள்கைக்கு முரணானது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.


தூண்டுதல் இன்றி...

சட்டத்துக்கு எதிராக எவ்வித தூண்டுதலும் இன்றி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நேற்று இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. எனவே அனைத்து கட்சிகளையும் முதல்-அமைச்சர் அழைத்து பேச வேண்டும்.

மேலும் சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மதத்தை அடிப்படையாக வைத்து எந்த சட்டத்தையும் இயற்ற கூடாது. அப்படி இயற்ற வேண்டும் என்றால் இந்து நாடு என்று அறிவித்துவிட்டு செய்யலாம்.

தவறான பிரசாரம்

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமிய மக்களை நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்பது தவறான பிரசாரம் ஆகும். இந்த சட்டம் எங்களை பாதிக்கவும் இல்லை. ஆனால் அரசியல் சட்டத்துக்கு முரணானது என்பது உண்மை. இதுபோன்ற சட்டத்தை ஏன் இயற்ற வேண்டும்? தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் அஸ்ஸ்ாமில் மட்டும் போடப்பட்டுள்ள சட்டம்.

அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என தொடர்ந்து கூறி வந்த உள்துறை மந்திரி அமித்ஷா, தற்போது மற்ற மாநிலங்களுக்கு கிடையாது என கூறுகிறார். இதை தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்கள் அனைவரின் உடல்களையும் மீட்க வேண்டும் உறவினர்கள் கண்ணீர் பேட்டி
மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்கள் அனைவரின் உடல்களையும் மீட்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர்மல்க கூறினர்.
2. “கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கொரோனாவால் பலியானவர்களின் இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
3. ‘கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன்’ சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்த சரண்யா பேட்டி
கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன் என சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த சரண்யா தெரிவித்தார்.
4. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் குமாரசாமி பரபரப்பு பேட்டி
பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
5. கொரோனாவுக்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
கொரோனா தடுப்பு மருந்தை எப்போது கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை. அதுவரை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.