மாவட்ட செய்திகள்

படப்பை அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி + "||" + On the barrier wall Motorcycle collision The plaintiff kills

படப்பை அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

படப்பை அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
படப்பை அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த சின்னமதுரபாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் ராம்கி (வயது 23). இவர் நேற்று தன்னுடைய உறவினரின் மோட்டார் சைக்கிளில் வாலாஜாபாத்தில் இருந்து வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.


படப்பையை அடுத்த கரசங்கால் அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும்போது நிலை தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ராம்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராம்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்புச்சுவரில் கார் மோதி கோர விபத்து குழந்தை, 2 பெண்கள் பலி ஒர்லி அருகே சோகம்
ஒர்லி அருகே தடுப்புச்சுவர் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், 6 மாத குழந்தை மற்றும் 2 பெண்கள் பலியாகினர்.