மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் 3½ பவுன் நகை பறிப்பு + "||" + 3½ pound jewelry seized by student with father on motorcycle

மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் 3½ பவுன் நகை பறிப்பு

மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் 3½ பவுன் நகை பறிப்பு
மோட்டார்சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் 3½ பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சூரமங்கலம்,

சேலம் நரசோதிப்பட்டி அவ்வைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சுபா‌ஷினி (வயது 18). இவர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாணவி, தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அந்த சமயத்தில் அவர்களை பின் தொடர்ந்து 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.


நகை பறிப்பு

ரெட்டிப்பட்டி அருகே வந்தபோது, அந்த மர்ம நபர்கள் ராஜேந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் அருகில் வந்து சுபா‌ஷினி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்து சென்றனர். பின்னர் அவர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 புதுவை போலீஸ்காரர்கள் பணிநீக்கம்
புதுவையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
2. ஆத்தூரில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை அபேஸ் போலீஸ்காரர்கள் போல் நடித்து 2 பேர் துணிகரம்
ஆத்தூரில் போலீஸ்காரர்கள் போல் நடித்து மூதாட்டியிடம் 11 பவுன் நகை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பெரம்பலூரில் பட்டப்பகலில் மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி விட்டு 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. குமரி மாவட்டத்தில் தொடர் கைவரிசை: பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது 50 பவுன் நகைகள் மீட்பு
குமரி மாவட்டத்தில் பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
5. அயோத்தியாப்பட்டணம் அருகே கோழி கடைக்காரர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
அயோத்தியாப்பட்டணம் அருகே கோழி கடைக்காரர் வீட்டில் 18 பவுன் நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.