அரக்கோணத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம்,
அரக்கோணத்தில், திருவள்ளூர் சாலையில் உள்ள சோதனைச்சாவடி பகுதியில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வேறு திசையில் தப்பி செல்ல முயன்றார். இதை பார்த்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வாலாஜா தாலுகா ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பதும், 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியை சேர்ந்தவர் அனீஸ் (வயது 17), நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் அததீப் (17), தேனி மாவட்டம் ஓடபட்டியை சேர்ந்தவர் அழகேஸ்வரன் (17).