கள்ளக்குறிச்சியில், கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில், கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2020 10:00 PM GMT (Updated: 16 March 2020 7:47 PM GMT)

கள்ளக்குறிச்சியில் கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 2017-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணைப்படி குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஊதியமாக 16 ஆயிரத்து 320 ரூபாயும், துப்புரவு தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக 9 ஆயிரத்து 370 ரூபாயும், தூய்மை காவலர்களுக்கு 6 ஆயிரத்து 150 ரூபாயும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கி கோரிக்கைகளை விளக்கி பேசினார். பின்னர் அவர்கள் சிறிது நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போட்டு விட்டு கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட துணைத் தலைவர் தங்கபாண்டியன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்து குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story