பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு


பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 March 2020 11:00 PM GMT (Updated: 17 March 2020 8:44 PM GMT)

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

ஊத்துக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 28-ந் தேதியில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சராசரியாக வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

பிப்ரவரி மாத கடைசியில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 150 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டியை சந்தித்து கிரு‌‌ஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தினர்.

மேலும் அதிகரிப்பு

அதன்பேரில் கடந்த 4-ந்தேதி முதல் தண்ணீர் வரத்து அதிகமாகியது. அன்று முதல் வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை முதல் நீர் வரத்து 630 கனஅடியாக அதிகரித்துள்ளது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 29.01 அடியாக பதிவானது. 1521 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 313 கனஅடி தண்ணீர், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீர் அனுப்ப படுகிறது.

Next Story