மாவட்ட செய்திகள்

சோழவந்தான் அருகே ரெயிலில் அடிபட்டு மாணவர் பலி + "||" + Student dies after being hit by a train near Cholavandan

சோழவந்தான் அருகே ரெயிலில் அடிபட்டு மாணவர் பலி

சோழவந்தான் அருகே ரெயிலில் அடிபட்டு மாணவர் பலி
சோழவந்தான் அருகே ரெயிலில் அடிபட்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
சோழவந்தான்,

சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். லாரி டிரைவர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதில் 2-வது மகன் கோகுல் (வயது 17) வாடிப்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் அவர் அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு இருந்த ெரயில்வே தண்டவாளத்தை கடந்து கண்மாய்க்கு செல்ல முற்பட்டார்.

அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி மாணவர் கோகுல் உயிரிழந்தார். இது குறித்து மதுரை ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மாணவர் கோகுலின் தாயார் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்புதான் நோய் வாய்ப்பட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சோழவந்தான் அருகே சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதம்; வெற்றிலை கொடிக்கால்களும் நாசம்
சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம், குருவித்துறை ஆகிய பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் வாழைகள், வெற்றிலை கொடிக்கால்களும் சேதமடைந்தது.