கொரோனா வைரஸ் எதிரொலி சென்னை விமான நிலையத்தில் 168 விமானங்கள் ரத்து
கொரோனா வைரஸ் பீதியால் பயணிகள் வரத்து குறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 168 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஆலந்தூர்,
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக விமானங்களில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் குவைத், இலங்கை, மலேசியா, துபாய், தாய்லாந்து, தோகா, சிங்கப்பூர், பக்ரைன், ஜெர்மனி, லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வரவேண்டிய 35 விமானங்களும், அதேபோல் சென்னையில் இருந்து மேற்கண்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 33 விமானங்களும் என 68 பன்னாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அதேபோல் சென்னையில் இருந்து ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, மும்பை, புனே, மதுரை, திருவனந்தபுரம், புவனேஸ்வர், திருச்சி, கொல்கத்தா, கோவா ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 53 விமான சேவைகளும், மீண்டும் அதே நகரங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 47 விமான சேவைகளும் என உள்நாட்டு முனையத்தில் 100 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ஒரே நாளில் 168 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமே பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story