மாவட்ட செய்திகள்

தலைவாசலில் தாறுமாறாக ஓடிய கார் சுற்றுலா வேன் மீது மோதல் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம் + "||" + Three people injured in car collision with van driver

தலைவாசலில் தாறுமாறாக ஓடிய கார் சுற்றுலா வேன் மீது மோதல் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்

தலைவாசலில் தாறுமாறாக ஓடிய கார் சுற்றுலா வேன் மீது மோதல் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்
தலைவாசலில் தாறுமாறாக ஓடிய கார், தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த சுற்றுலா வேன் மீது மோதியது. இதில் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
தலைவாசல்,

சேலத்தில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வேன் ஒன்று நேற்று புறப்பட்டது. சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 35) என்பவர் வேனை ஓட்டி வந்தார். இந்த வேனில் உரிமையாளரான சென்னை கொளத்தூரை சேர்ந்த மோகன் (40) என்பவரும் உடன் வந்தார்.


இந்த வேன் நேற்று மதியம் 1 மணியளவில் சேலம் மாவட்டம், தலைவாசல் ஏரிக்கரையில் வாகன எடை போடும் நிலையத்திற்கு எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் எதிர்பாராவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் அந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி, எதிரே சென்னை நோக்கி சென்ற அந்த சுற்றுலா வேன் மீது மோதியது.

3 பேர் காயம்

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதே நேரத்தில் வேனின் முன்பகுதி சேதம் அடைந்ததுடன், அருகில் உள்ள சாலையோரத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் வேனில் வந்த முருகன், மோகன் ஆகியோரும், கார் டிரைவரும் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் நொறுங்கிய காரை கிரேன் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் காயம் அடைந்த 3 பேரும் தலைவாசலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமைச்சரின் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே மோதல் 18 பேர் காயம்
கரூரில் அமைச்சரின் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதில் 18 பேர் காயமடைந்தனர்.
2. கணுக்காலில் ஏற்பட்ட காயம்: நியூசிலாந்து வீரர் கிரான்ட்ஹோம் குணமடைய 8 வாரங்கள் ஆகும் - டாக்டர்கள் தகவல்
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் கிரான்ட்ஹோம் குணமடைய 8 வாரங்கள் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
3. வழிப்பறி கொள்ளையர்களால் விபத்து பஸ்கள் மீது கன்டெய்னர் லாரி மோதல்; 5 பேர் காயம்
வழிப்பறி கொள்ளையர்களால் விபத்து பஸ்கள் மீது கன்டெய்னர் லாரி மோதல்; 5 பேர் காயம்.
4. முத்துப்பேட்டை அருகே மின்கம்பத்தில் வேன் மோதி 17 பேர் காயம்
வேளாங்கண்ணிக்கு வந்து விட்டு திரும்பி சென்ற போது முத்துப்பேட்டை அருகே வேன், மின்கம்பத்தில் மோதி 17 பேர் காயம் அடைந்தனர்.
5. காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் உயிரிழப்பு
காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.