மாவட்ட செய்திகள்

திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது + "||" + 1,250 tonnes of rice shipped from Thiruvarur to Villupuram

திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.


அதன்படி திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் சன்னரக அரிசி சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 24 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு ரெயில் அரிசி மூட்டைகளுடன் விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றது.

தொடர்புடைய செய்திகள்

1. நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
2. தஞ்சையில் இருந்து காஞ்சீபுரத்துக்கு அரவைக்காக 800 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது
தஞ்சையில் இருந்து சரக்கு ரெயிலில் காஞ்சீபுரத்துக்கு 800 டன் நெல் அரவைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
3. சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 2,473 டன் உரம் தஞ்சைக்கு வந்தது
சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 2,473 டன் உரம் தஞ்சைக்கு வந்தது.
4. திருவாரூரில் இருந்து தேனிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
திருவாரூரில் இருந்து தேனிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
5. திருச்சி அருகே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கிளம்பிய புகையால் பரபரப்பு நடுவழியில் நிறுத்தப்பட்டது
மதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கிளம்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.