நீதிமன்ற பணிக்கு போலி நியமன ஆணை வழங்கிய 2 பேர் கைது குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை


நீதிமன்ற பணிக்கு போலி நியமன ஆணை வழங்கிய 2 பேர் கைது குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 March 2020 11:00 PM GMT (Updated: 23 March 2020 8:17 PM GMT)

நீதிமன்ற பணிக்கு போலி நியமன ஆணை வழங்கிய 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகனம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் சிவா (வயது 21). கவுரிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகன் சஞ்சீவன் (23). இவர்கள் 2 பேரும் நேற்று தர்மபுரி நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த பணியாளர் அண்ணாதுரையிடம், சிவா மாவட்ட அமர்வு நீதிமன்ற அலுவலக நிர்வாக உதவியாளர் பணிக்கும், சஞ்சீவன் அரூர் சார்பு நீதிமன்ற இளநிலை அலுவலக நிர்வாக உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை காண்பித்துள்ளனர். அந்த நியமன ஆணைகள் போலியாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அண்ணாதுரை இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த ஆணைகளை பரிசோதித்ததில் அவைகள் ேபாலியானவை என்பது தெரியவந்தது.

2 பேர் ைகது

இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற முதன்மை நிர்வாக அலுவலர் பாஸ்கரன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கருணாகரன் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் நீதிமன்ற பணிக்கு போலி நியமன ஆணை வழங்கிய சிவா, சஞ்சீவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இவர்களுக்கு போலி நியமன ஆணை வழங்கியவர்கள் குறித்து குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story