ஊத்துக்கோட்டையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு


ஊத்துக்கோட்டையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு
x
தினத்தந்தி 24 March 2020 3:45 AM IST (Updated: 24 March 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அரசு பஸ் டிப்போவில் 39 பஸ்கள் உள்ளன. இவை பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி ஊத்துக்கோட்டை அரசு பணிமனையில் இருந்து புதுச்சேரி மற்றும் ஆந்திராவுக்கு செல்லும் 19 பஸ்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இந்த பஸ்கள் டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் ஆந்திரா மற்றும் புதுச்சேரிக்கு செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர். மேலும் ஊத்துக்கோட்டையில் தமிழக எல்லையில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கால் நடையாக வரும் நபர்களுக்கு நோய் தடுப்பு மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகின்னர்.

Next Story