கொரோனா வைரஸ் பீதி எதிரொலி: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதை தவிர்க்கும் பொதுமக்கள்


கொரோனா வைரஸ் பீதி எதிரொலி:  நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதை தவிர்க்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 March 2020 4:30 AM IST (Updated: 24 March 2020 6:52 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பீதி எதிரொலியாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள்.

நெல்லை, 

கொரோனா வைரஸ் பீதி எதிரொலியாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நெல்லை மாநகராட்சி பகுதியிலும் துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகர பகுதியில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, கருப்பந்துறை, குறுக்குத்துறை முருகன் கோவில், மணிமூர்த்தீஸ்வரம், பேராத்து செல்வி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் ஏராளமானவர்கள் குளிப்பது வழக்கம். மேலும் விடுமுறை நாட்களிலும் ஆற்றில் குளிக்க மக்கள் கூட்டம் அலைமோதும்.

தாமிரபரணி ஆறு 

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டாலும் ஆற்றில் கூட்டம் இல்லை. கரையோர மக்கள்கூட தாமிரபரணி ஆற்றில் குளிப்பதை தவித்து வருகின்றனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் ஆற்றுக்கு வந்து குளிக்காமல் வீட்டிலேயே குளிக்கிறார்கள். இதனால் ஆற்றின் கரையோரங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story