குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து: புகார் பெட்டியில் மனுவை போட்ட பொதுமக்கள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து பொதுமக்கள் புகார் பெட்டியில் மனுவை போட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக குறைதீர்க்கும் கூட்டத்தை வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்வதாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்திருந்தார்.
இந்த தகவல் தெரியாத சிலர் நேற்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் தங்களது மனுக்களை போட்டு சென்றனர். இதுபோல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வந்தவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. கைகளை கழுவிய பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story