இலவச உணவு வாங்க இந்திரா உணவகத்தில் குவிந்த மக்கள் பெங்களூருவில் வாகன ஓட்டிகள் மீது போலீசார் தடியடி


இலவச உணவு வாங்க இந்திரா உணவகத்தில் குவிந்த மக்கள் பெங்களூருவில் வாகன ஓட்டிகள் மீது போலீசார் தடியடி
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 24 March 2020 6:24 PM GMT)

பெங்களூருவில் உள்ள இந்திரா உணவகங்களில் குவிந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று உணவு வாங்கி சாப்பிட்டனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் உள்ள இந்திரா உணவகங்களில் குவிந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று உணவு வாங்கி சாப்பிட்டனர். இதற்கிடையே வாகன ஓட்டிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு உத்தரவு

கர்நாடகத்தில் ெகாரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் ெபங்களூரு புறநகர், பெங்களூரு, தட்சிண கன்னடா, தார்வார், மைசூரு, கலபுரகி உள்பட மாநிலம் முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை ஊடரங்கு உத்தரவை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

மேலும் பெங்களூருவில் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இந்திரா உணவகங்கள் திறந்து இருக்கும் என்றும், அங்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்து இருந்தது.

தடியடி

அதன்படி நேற்று பெங்களூருவில் உள்ள இந்திரா உணவகங்கள் அனைத்தும் திறந்து இருந்தன. அந்த உணவகங்களில் குவிந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று உணவு வாங்கி சாப்பிட்டனர். அவர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் காத்து நின்று இருந்தனர்.

இதுபோல பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்த வடமாநிலத்தினர் உள்பட 100-க்கும் மேற்பட்ட பயணிகளை போலீசார் ரெயில் நிலைய வாசலிலேயே தடுத்து நிறுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பயணிகள் அனைவரும் மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள இந்திரா உணவகத்தில் சாப்பிட்டனர். அவர்களில் சிலர் வரிசையில் நிற்காமல் முண்டியடித்து கொண்டு இந்திரா உணவகத்திற்குள் செல்ல முயன்றனர். அவா்கள் மீது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி நடத்தினர்.

போலீசாரிடம் வாக்குவாதம்

இதுபோல பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிைலயத்திற்கு ஒரு பஸ் கூட வரவில்லை. அந்த வழியாக மோட்டார் சைக்கிள்கள், கார்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வீடுகளுக்கு திரும்பி செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால் சிலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் போலீசார் லேசான தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

இன்று கர்நாடகத்தில் யுகாதி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. அங்கும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். மொத்தத்தில் பெங்களூரு நகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story