மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறி மதுரை நகரில் சுற்றித்திரிந்த 12 பேர் கைது + "||" + 12 persons arrested in Madurai for violating curfew

ஊரடங்கு உத்தரவை மீறி மதுரை நகரில் சுற்றித்திரிந்த 12 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறி மதுரை நகரில் சுற்றித்திரிந்த 12 பேர் கைது
ஊரடங்கு உத்தரவை மீறி மதுரை நகரில் சுற்றித்திரிந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, 

மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறி நகரில் வலம் வந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன. அங்கு சோதனைச்சாவடி அமைத்து 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தவிர நகரின் முக்கிய இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணியில் உள்ளனர். அப்போது சாலைகளில் வரும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தி அனுப்பி வைக்கிறார்கள். ஒரு சிலர் தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் நகரில் வலம் வருகிறார்கள். அவர்களை போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்தும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தும், ஒரு சிலரை தோப்புகரணம் போடவைத்து போலீசார் தண்டனை விதித்து அனுப்பி வைக்கிறார்கள்.

இவ்வாறு மதுரை நகரில் நேற்று மாலை வரை விதிகளை மீறி நகரில் வலம் வந்ததாக 364 வழக்கு பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். 297 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, 1 லட்சத்து 22 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கால் சுத்தமான கங்கை, யமுனை ஆறுகள்
ஊரடங்கால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றுநீரின் தரம் மேம்பட்டுள்ளது.
2. ஊரடங்கு காரணமாக வியாபாரம் பாதிப்பு: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மூங்கில் பொருள் உற்பத்தியாளர்கள் - அரசு உதவ கோரிக்கை
ஊரடங்கு காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மூங்கில் பொருட்கள் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே அரசு உதவி செய்ய முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு; பிரதமர் அறிவிப்பு
சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
4. ஊரடங்கை மீறுபவர்களை போலீஸ் அடிப்பது தவறல்ல -நடிகர் சுரேஷ் கோபி
ஊரடங்கை மீறுபவர்களை போலீஸ் அடிப்பது தவறல்ல என்று பிரபல நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
5. ஊரடங்கினால் தீப்பெட்டி ஆலை பூட்டப்பட்டதால் வீட்டில் இருந்த பெண், சுவர் விழுந்து பலி
சாத்தூர் அருகே ஊரடங்கு உத்தரவினால் தீப்பெட்டி ஆலை பூட்டப்பட்டதால் வீட்டில் இருந்த பெண், வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.