ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வாட்ஸ்- அப்பில் வேண்டுகோள்


ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வாட்ஸ்- அப்பில் வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 March 2020 10:45 PM GMT (Updated: 28 March 2020 10:57 PM GMT)

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பொதுமக்களுக்கு வாட்ஸ்-அப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாட்ஸ்-அப்பில் அவர் பேசியிருப்பதாவது:-

பனைக்குளம்,

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய முக்கிய தருணம் இது. இதனால் மக்களுக்கு பாதிப்பு வராமல் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் உத்தரவு அடிப்படையில் அலுவலர்கள் வெளியில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

நாட்டு நலனுக்காகவும், நம்முடைய நலனுக்காகவும் பொதுமக்கள் அனைவரும் தயவு செய்து வீட்டிலேயே இருக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன். சாதாரணமாக சோப்பு போட்டு கைகளை கழுவினாலே அழியக்கூடிய இந்த கொரோனா வைரஸ் கிருமி, நாம் அலட்சியமாக இருந்தால் உயிரையே கொல்லும். இதிலிருந்து நம்மை பாதுகாக்க அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.

அனைவரும் சுயகட்டுப்பாட்டுடன் வீட்டிலேயே இருக்க வேண்டும். குறைந்தது 1 அல்லது 2 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் சிலர் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தேவையற்ற பயணங்கள் செய்து கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு வந்தால், அதன் மூலம் ஆயிரம் பேருக்கு மேல் பரவக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே நாம் அனைவரும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசியுள்ளார்.

Next Story