சாத்தூர் பைபாஸ் ரோட்டில் புத்துயிர் பெற்ற உழவர் சந்தை


சாத்தூர் பைபாஸ் ரோட்டில் புத்துயிர் பெற்ற உழவர் சந்தை
x
தினத்தந்தி 30 March 2020 4:00 AM IST (Updated: 30 March 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சாத்தூர் பைபாஸ் ரோட்டில் உள்ள உழவர்சந்தையில் காய்கறி மார்க்கெட் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாத்தூர், 

சாத்தூரில் தனலட்சுமி தியேட்டர் அருகில் குறுகலான இடத்தில் காய்கறி மார்க்கெட் இயங்கி வந்ததால் மூடப்பட்டது. அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறி வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சாத்தூர் பைபாஸ் ரோட்டில் உள்ள உழவர்சந்தையில் காய்கறி மார்க்கெட் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது. 

படந்தால், அண்ணாநகர், பெரியார் நகர், வெங்கடாசலபுரம் பகுதியில் வசிப்போர் பலனடையும் வகையில் இங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய இடத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுபகுமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் திருப்பதி ஆகியோர் பார்வையிட்டனர். அங்கு சமூக இடைவெளிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் சாத்தூர் உழவர்சந்தை புத்துயிர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story