அருப்புக்கோட்டையில் கூடுதலாக காய்கறி மார்க்கெட் - சாத்தூர் ராமச்சந்திரன் வலியுறுத்தல்
அருப்புக்கோட்டையில் கூடுதலாக காய்கறி மார்க்கெட் திறக்க சாத்தூர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆணையாளர் அயூப்கான், பொறியாளர் சேர்மக்கனி, ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டி, தாசில்தார் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமேஸ்வரி, நாகமுத்து, மருத்துவ அதிகாரி வெங்கடேசன், ஒன்றிய குழு தலைவர் சசிகலா பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தனிமைப்படுத்தியவர்களை கண்காணிப்பது மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பாதுகாப்பான குடிநீர் வழங்குவது, கிருமி நாசினி தெளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேவையானவற்றை மாவட்ட நிர்வாகத்தை அணுகி பெறுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக புதிய பஸ் நிலையம், சிவன்கோவில், நெல்பேட்டை ஆகிய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டை அவர் பார்வையிட்டார். கூட்ட நெரிசலை சமாளிக்க வெள்ளைகோட்டை, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் காய்கறி மார்க்கெட் அமைக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story