காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
காஞ்சீபுரம்,
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க கோவில்களும் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெற இருந்த பங்குனி உத்திர பெருவிழாவும் கோவில் நிர்வாகம் சார்பில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கோவில் மூடப்பட்டாலும் ஆகமப்படி நித்திய பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் கோவிலுக்குள் நுழையும்போது முகக்கவசம் அணிந்தும், கைகளில் கிருமி நாசினி மருந்தால் சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவிலுக்குள் நுழையும் போது அர்ச்சகர்கள், பணியாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்ட பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். வேறு நபர்கள் யாரையும் அனுமதிக்கப்படுவதில்லை. கோவில் செயல் அலுவலர் சோ.செந்தில்குமார் மேற்பார்வையில், கோவிலை தூய்மையாக வைத்து கொள்ள அர்ச்சகர்கள் பூஜைகள் செய்வதற்கு முன்பும், பூஜைகள் செய்த பிறகும் கோவில் உள்பிரகாரம், வெளிபிரகாரம் மற்றும் சன்னதிகள் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினி மருந்தை கோவில் ஊழியர்கள் தெளித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story