படுக்கைகளுடன் அமைப்பு கொரோனா சிகிச்சைக்கு மதுரையில் தனி மருத்துவமனை
கொரோனா சிகிச்சைக்கு மதுரையில் தனி மருத்துவமனை 500 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் எதிரே, அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் சுமார் 5 ஏக்கரில் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு சிறுநீரகவியல் துறை உள்ளிட்ட 6 துறைகள் செயல்பட்டு வந்தன.
இந்தநிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் தனி மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான பெயர் பலகையும் மருத்துவமனை நுழைவு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, “மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையை கொரோனா மருத்துவ மனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கான பரிசோதனை, சிகிச்சை ஆகியவை தனித்தனி இடங்களில் செய்யப்பட்டு வந்தது.
இதனை தவிர்ப்பதற்காக தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனைத்தும் ஒரே இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா அறிகுறியால் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு ஒரே இடத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, அதே இடத்தில் உடனடி சிகிச்சையும் அளிக்கப்படும். இதன் மூலம் நேரம் மிச்சப்படுத்தப்படும். நோயாளிகளின் தேவையை பொறுத்து இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்” என்றனர்.
Related Tags :
Next Story