கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
ஈரோடு,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றவும் பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் பல்வேறு கோவில்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது.
அதன்படி ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகம், உலக நன்மைக்காகவும், உலகில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காகவும் நடைபெற்றது. 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், யாகம் நடத்துபவர்களை தவிர பக்தர்கள் உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை.
Related Tags :
Next Story