டெல்லி சென்று திரும்பிய 7 பேருக்கு கொரோனா இல்லை


டெல்லி சென்று திரும்பிய 7 பேருக்கு கொரோனா இல்லை
x
தினத்தந்தி 7 April 2020 4:45 AM IST (Updated: 7 April 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி சென்று திரும்பிய 7 பேருக்கு நடந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏதுமில்லை என உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு நோய் பாதிப்பு உடையவர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சமீபத்தில் வீடு திரும்பியவர்களை கணக்கெடுக்கும் பணி வீடு வீடாக நடந்தது. 

அப்போது யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் 1948 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே பகுதியில் வசித்ததால் அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை மாவட்டம் முழுவதும் 11 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டு அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு ஊர் திரும்பிய 7 பேர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுக்கான பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏதுமில்லை என உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்து 28 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story