சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆம் போக விவசாய பணிகள் மும்முரம்


சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆம் போக விவசாய பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 8 April 2020 4:30 AM IST (Updated: 8 April 2020 3:28 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆம் போக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்குடி, 

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை பொறுத்தவரை வானம் பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் ஆண்டுதோறும் நல்ல மழை பெய்து கண்மாய்கள் முழுவதும் நிரம்பினால் மட்டும் விவசாயம் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த மாவட்டங்களில் போதிய மழையில்லாமல் விவசாயம் நடைபெறாமல் இருந்து வந்தது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்தாண்டிற்கு முன்னதாக இந்த பகுதியில் போதிய மழையில்லாததால் விவசாயம் முற்றிலும் பொய்த்து போனது. 

இதனால் இந்த பகுதி விவசாயிகளில் சிலர் மாற்றுத் தொழிலுக்கும், சிலர் வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையினால் பெரும்பாலான பகுதிகளில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இது தவிர கிணற்று பாசனம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் 2-ம் போக விவசாய பணிக்கும் தங்களது நிலங்களை தயார் செய்து நெல் நடவு பணிகளை ஆரம்பித்தனர். 

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் போனது. தற்போது விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் தங்களது நிலங்களில் 2-ம் போக சாகுபடிக்காக உழவு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story