குன்னத்தூர் பகுதி ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு பணி மும்முரம்
குன்னத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு பணி மும்முரமாக நடந்துவருகிறது.
குன்னத்தூர்,
குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிரவெளி, பாப்பா வலசு, தேவனம்பாளையம், மயிலம்பாளையம், நெசவாளர்காலனி, இந்திரா நகர், ரங்கநாயக்கனூர், குழியன்காடு, வடுகபாளையம், வடுகபாளையம் ஆதிதிராவிடர் காலனி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் சிவன்மலை, துணை தலைவர் தங்கமுத்து, ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கணபதிபாளையம், மோளகுட்டை, அர்த்தநாரிபாளையம், கட்டையக்காடு, கொண்ணக்காடு காலனி, வேட்டகாடு ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் கவிதா துணை தலைவர் ராமசாமி, ஊராட்சி செயலர் ஆனந்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். நவக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நவக்காடு, சின்னகாட்டுவலவு, ஒருக்காம்பாளையம், கோவிந்தன்காடு, பெரியகாடு, நட்டுவன்காடு, ஆலாங்காடு பகுதியில் கொரோனோ வைரஸ் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு பவுடர் அடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் சென்னியப்பன், துணை தலைவர் முத்துச்சாமி, ஊராட்சி செயலர் பாஸ்கரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
குன்னத்தூர் அருகே காவுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கே.தொட்டிபாளையம், சுக்காகவுண்டன்புதூர், மேற்கு தச்சம்பாளையம், கிழக்கு தச்சம்பாளையம், வாமலைகவுண்டன் பாளையம், கந்தப்பகவுண்டன் புதூர், வேப்பம்பாளையம், செட்டியாகவுண்டன் புதூர், குமரிகல்பாளையம், செம்பூத்தாம்பாளையம், கரையான்புதூர், நாச்சிபாளையம், கூலபாளையம், வடக்கு தோட்டம், புலவன்தோட்டம் பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு கிருமி நாசினி பவுடர் தூவப்பட்டது.
மேலும் கே.தொட்டி பாளையம், சுக்காகவுண்டன் புதூர் ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கல்பனா, யமுனாதேவி, காவுத்தாம்பாளையம் ஊராட்சி தலைவர் பவித்ரா, துணை தலைவர் வெள்ளைசாமி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story