ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். கோவில்பட்டி அத்தைகொண்டான் கோமதி நகரில் சலவை தொழிலாளர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஒன்றிய கவுன்சிலர் நிர்மலா அழகர்சாமி வழங்கினார்.
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி செக்கடி தெருவில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தவமணி ஏழைகளுக்கு இலவச காய்கறிகளை வழங்கினார்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் பா.ஜனதாவினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். பின்னர் ஏழைகளுக்கு முககவசம், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி, நகர தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில், மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி வழங்கினார்.
பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணைத்தலைவர் ஜெகதீஸ் ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு பா.ஜனதாவினர் உணவு பொட்டலங்களை வழங்கினர். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செந்தூர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடியில் வணிகர்கள் சங்கம் சார்பில், தூய்மை பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருங்கை மகாராஜா வழங்கினார். வணிகர்கள் சங்க தலைவர் அம்புரோஸ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனி பிரிமின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குலசேகரன்பட்டினத்தில் ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று, வார்டு உறுப்பினர் ஞானஈசுவரி சக்திவேல் உணவு பொட்டலம் வழங்கினார்.
குரும்பூர் அருகே கானம் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் 19 தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார். மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story