தாராவியில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா


தாராவியில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 April 2020 5:00 AM IST (Updated: 11 April 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மும்பை,

மும்பை தாராவி பகுதியில் அதிகளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே இங்கு 17 பேரை கொரோனா தாக்கி இருந்தது. இதில் கல்யாணவாடியை சேர்ந்த தமிழ் மூதாட்டி உள்பட 3 பேர் பலியாகினர். 

இந்தநிலையில் தாராவியில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.  இதில் 2 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவர்கள். ஒருவர் ஏற்கனவே கொரோனவால் பாதிக்கப்பட்ட வைபவ் கட்டிடத்தில் வசித்து வரும் டாக்டரின் 29 வயது மனைவி ஆவார். மற்றொரு 31 வயது பெண் கல்யாணவாடியை சேர்ந்தவர். முருகன் சால், பாலிகா நகர், பி.எம்.ஜி.பி. காலனி, முகுந்த் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிகப்பட்சமாக 5 பேர் முகுந்த் நகரை சேர்ந்தவர்கள்.

ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story