மும்பையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ நெருங்கியது - இதுவரை 64 பேர் பலி
மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ நெருங்கி உள்ளது. பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்து இருக்கிறது.
மும்பை,
நாட்டின் நிதி தலைநகரான மும்பைக்கு கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தலாகி உள்ளது. அதிவேகம் எடுக்கும் கொரோனாவால் நாளுக்கு நாள் தொற்று பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மும்பையில் 212 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் கொடிய தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 993 ஆகி உள்ளது. இங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ நெருங்கி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல மும்பையில் நேற்று கொரோனாவுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மும்பையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64 ஆகி உள்ளது.
இதுவரை மும்பையில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி கூறியுள்ளது.
Related Tags :
Next Story