கோபியில் செவ்வாழைப்பழம் கிலோ 2 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் - விவசாயிகள் வேதனை


கோபியில் செவ்வாழைப்பழம் கிலோ 2 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 19 April 2020 10:15 PM GMT (Updated: 19 April 2020 7:23 PM GMT)

கோபியில் செவ்வாழைப்பழத்தை கிலோ 2 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளார்கள்.

கடத்தூர், 

கோபி அருகே உள்ள கூகலூர், தொட்டிபாளையம், புதுக்கரைப்புதூர், பாரியூர், காசிபாளையம், சிங்கிரிபாளையம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் செவ்வாழைகள் பயிரிட்டுள்ளார்கள். இந்த வாழைகள் தற்போது குலை தள்ளி அறுவடைக்கு தயாராக உள்ளன.

வழக்கமாக விவசாயிகள் வாழைத்தார்களை அவர்களே அறுவடை செய்து நேரடி விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். வியாபாரிகளும் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்வார்கள். தங்களுக்கு விலை கட்டுபடியானால் விற்றுவிடுவார்கள்.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டி விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளார்கள். இதனால் வியாபாரிகள் தோட்டங்களுக்கு சென்று கொள்முதல் செய்கிறார்கள். ஆனால் சூழ்நிலையை பயன்படுத்தி விலை குறைவாக அதாவது ஒரு கிலோ செவ்வாழை பழத்தை 2 ரூபாய்க்கு கேட்பதாக தெரிகிறது. இதனால் வேதனைப்படும் விவசாயிகள் பலர் தோட்டத்தில் உள்ள தார்களை அறுவடை செய்யாமலேயே விட்டுவிட்டார்கள். சிலர் வேறு வழியின்றி குறைந்த விலைக்கு விற்று வருவதாக கூறினார்கள்.

Next Story