திருவாரூரில், வெளியில் சென்றுவர பொதுமக்களுக்கு, 3 வண்ணங்களில் அனுமதி அட்டை நகராட்சி ஆணையர் வழங்கினார்


திருவாரூரில், வெளியில் சென்றுவர பொதுமக்களுக்கு, 3 வண்ணங்களில் அனுமதி அட்டை நகராட்சி ஆணையர் வழங்கினார்
x
தினத்தந்தி 20 April 2020 5:17 AM IST (Updated: 20 April 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் வெளியில் சென்றுவர பொதுமக்களுக்கு 3 வண்ணங்களில் அனுமதி அட்டைகளை நகராட்சி ஆணையர் வழங்கினார்.

திருவாரூர், 

திருவாரூரில் வெளியில் சென்றுவர பொதுமக்களுக்கு 3 வண்ணங்களில் அனுமதி அட்டைகளை நகராட்சி ஆணையர் வழங்கினார்.

3 வண்ணங்களில் அனுமதி அட்டை

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்பவர்களுக்காக 3 வண்ணங்களின் அனுமதி அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதற்கான அட்டை தயாராகி நேற்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் நகரில் நகராட்சி ஆணையர் சங்கரன் 3 வண்ணங்களில் தயாரான அனுமதி அட்டையை வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், இதில் வாரத்திற்கு 2 நாட்கள் மட்மே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வெளியில் வர பயன்படுத்தி கொள்ளலாம். வீட்டிற்கு ஒரு நபர் அனுமதிக்கப்பட்ட நாளில்் ஒரு தடவை மட்டுமே அனுமதி அட்டையை பயன்படுத்த இயலும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதார் அட்டை

மேலும் 15 வயதிற்கு மேல் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த அனுமதி அட்டையை பயன்படுத்தி வெளியே வர அனுமதிக்கப்படுவர். அனுமதி அட்டையை குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது.

வெளியில் வரும் போது கட்டாயம் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் கையில் எடுத்து வர வேண்டும். மேற்காணும் விதிகளில் ஏதும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து போலீஸ்்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவி்த்தார்.

Next Story