தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பத்திர பதிவு அலுவலகங்கள் செயல்பட்டன


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பத்திர பதிவு அலுவலகங்கள் செயல்பட்டன
x
தினத்தந்தி 21 April 2020 4:45 AM IST (Updated: 21 April 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பத்திர பதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் தமிழக அரசின் உத்தரவுப்படி நேற்று முதல் செயல்பட தொடங்கின. தர்மபுரி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் பத்திர பதிவு செய்ய வந்தவர்கள் சமூக இடைவெளியுடன் கட்டுப்பாடுகளை பின்பற்றினார்கள். பதிவுக்கான ஆவணத்தை தாக்கல் செய்தல், அடையாள அட்டை சரிபார்ப்பு, விரல் ரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றிற்கு சம்பந்தப்பட்ட நபரை மட்டுமே அனுமதித்தனர். நேற்று 25-க்கும் மேற்பட்ட பத்திர பதிவுகள் நடைபெற்றன. குறைந்த எண்ணிக்கையிலேயே பத்திர பதிவுகள் நடைபெற்றதால் பத்திரபதிவு அலுவலகங்களில் ஆட்கள் நடமாட்டம் மிகக்குறைவாகவே இருந்தது.

இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்திரபதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின. ஆனால் பத்திர பதிவுகள் எதுவும் நடைபெறவில்லை என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

Next Story