ஈரோடு ரங்கம்பாளையத்தில் உணவுக்கு கஷ்டப்படும் ஊசிபாசி விற்கும் சமூகத்தினர்


ஈரோடு ரங்கம்பாளையத்தில் உணவுக்கு கஷ்டப்படும் ஊசிபாசி விற்கும் சமூகத்தினர்
x
தினத்தந்தி 21 April 2020 4:15 AM IST (Updated: 21 April 2020 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக ரங்கம்பாளையத்தில் ஊசிபாசி விற்கும் சமூகத்தினர் உணவுக்கு மிகவும் கஷ்டப்படுவதாக தெரிவித்தனர்.

ஈரோடு, 

ஈரோடு ரங்கம்பாளையம் சக்தி நகர் பகுதியில் ஊசிமணி, பாசி மணி விற்பனை செய்யும் சமூகத்தை சேர்ந்த 60 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே பாசி மணிகளால் மாலைகள் செய்து வீதி வீதியாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விற்பனை செய்து தங்கள் வாழ்க்கையை ஓட்டி வந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக எங்கும் செல்ல முடியாமல் அவர்களின் குடியிருப்பு பகுதியிலேயே இருக்கிறார்கள்.

பெரியவர்கள், குழந்தைகள் என்று 60 குடும்பத்தை சேர்ந்தவர்களும் அங்கேயே இருக்கிறார்கள். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகும் நிலையில் இவர்கள் உணவுக்கு கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஊரடங்கு முடிந்ததும் விற்பனை செய்ய மாலைகள் தயார் செய்யும் பணியை அவர்கள் செய்து வருகிறார்கள். 

குழந்தைகள், முதியவர்கள் பலரும் உள்ளதால் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்தனர். விரைவில் ஊரடங்கு முடிந்தால் எங்கள் தொழிலை செய்து குடும்பத்தை காப்பாற்றிக்கொள்ளலாம். இல்லை என்றால் யாராவது உணவு கொடுத்து உதவினால் மட்டுமே சிரமம் குறையும் என்கிறார்கள்.

Next Story