அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நேரத்தில் மாற்றம் இல்லை: தர்மபுரி கலெக்டர் மலர்விழி தகவல்
அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்காக அறிவிக்கப்பட்ட நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்காக அறிவிக்கப்பட்ட நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் 144- தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசங்களை கட்டாயம் அணியவும் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மாநில பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற மே மாதம் 3-ந்தேதி வரை தொடர்ந்து நீடிக்கும். தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகள் மட்டும் தொடரும்.
அத்தியாவசிய பொருட்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் விற்பனை செய்ய ஏற்கனவே நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதில் எந்த வித மாற்றமும் இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கண்ட நடைமுறைகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றி உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கலெக்டர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story