கொடைக்கானல் அருகே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் கிராம மக்கள்
கொடைக்கானல் அருகே ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி ஊராட்சிக்குட்பட்ட செம்பரான்குளம் பகுதியில் ஆதிவாசி பழங்குடியின மக்களும், ஆதிதிராவிடர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது அத்தியாவசியப்பொருட்களை வாங்குவதற்காக சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாச்சலூர் அல்லது வடகவுஞ்சி கிராமத்துக்கோ சென்று வரவேண்டும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவால் அவர்கள் அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்காமல் தவித்து வந்தனர். தகவலறிந்த கொடைக்கானல் இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் நேரில் சென்று முக கவசங்கள், பிஸ்கட்டுகளை வழங்கினர். அவர்கள் முக கவசங்களை அணிந்து கொண்டனர்.
அப்போது கிராம மக்களிடம் கேட்டபோது, தமிழக அரசு வழங்கிய ரேஷன் பொருட்களை வைத்து கடந்த சில நாட்கள் சாப்பிட்டனர். தற்போது அத்தியாவசியப்பொருட்களான பால், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கவில்லை. மலைப் பகுதிகளில் விளையும் கீரைகள், சுண்டல், கிழங்குகள் போன்றவற்றை சாப்பிட்டு வருகிறோம். கிராமத்தில் இதுவரை கிருமி நாசினி தெளிக்கவில்லை. முக கவசம் பயன்படுத்தியதில்லை. எனவே எங்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களை வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story