புஞ்சைபுளியம்பட்டி அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கும் திட்டம் - அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்
புஞ்சைபுளியம்பட்டி அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி அம்மா உணவகத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இதில் நகராட்சி ஆணையாளர் முத்துக்குமார், பவானிசாகர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் டி.பாபு, நிர்வாகிகள் பொன்னுசாமி, ஜெயசேகரன், மயில்சாமி, ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story