தாராவியில் புதிதாக 21 பேருக்கு கொரோனா - பாதித்தோர் எண்ணிக்கை 241 ஆனது
தாராவியில் 21 பேருக்கு புதியதாக கொரோனா பாதிக்கப்பட்டது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241-ஆக உயர்ந்து உள்ளது.
மும்பை,
உலகில் அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளில் ஒன்றான மும்பை தாராவியில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது.
இதில் நேற்று மட்டும் புதிதாக 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 11 பேர் ஆண்கள். 10 பேர் பெண்கள்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் தாராவி கோலிவாடா -2 பேர், முகுந்த்நகர் -3, 60 அடி ரோடு-3, சாந்திசிவன் அடுக்குமாடி குடியிருப்பு -1, குஞ்ச்குருவே நகா்-1, இந்திராநகர்- 4, கல்பத்ரு அடுக்குமாடி குடியிருப்பு-1, கல்யாணவாடி-2, சோசியல்நகர் -2, ராஜூவ்காந்தி நகர்-1, மாட்டுங்கா லேபர் கேம்ப்-1 என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
241-ஆக உயர்வு
இதன் மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல தாராவியில் இதுவரை கொரோனாவுக்கு 14 பேர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே தாராவியில் கொரோனா அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த 2 ஆயிரத்து 300 இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்தார்.
Related Tags :
Next Story