கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை நாகை கலெக்டர் எச்சரிக்கை


கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை நாகை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 April 2020 12:01 AM GMT (Updated: 26 April 2020 12:01 AM GMT)

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம், 

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உர வினியோகம்

நாகை மாவட்டத்தில் கோடை பருவ பயிர்களான நெல், பருத்தி போன்ற பயிர்களுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்கள் கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி சீர்காழி வட்டாரத்தில் நடமாடும் உர விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது.

உர விற்பனை நிலையங்களில் விற்பனையாளர்கள் உர இருப்பு விவரம் மற்றும் விலை விவரத்தை தினமும் அறிவிப்பு பலகையில் பதிவு செய்ய வேண்டும்.

உரிமம் ரத்து

விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் உரங்கள் கண்டிப்பாக அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உர விற்பனையாளர்கள் ‘ஓ’ படிவத்தில் உள்ள உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

விற்பனை முனைய கருவி மூலம் விற்பனை செய்யாத விற்பனையாளர்கள் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை முனைய கருவி பறிமுதல் செய்யப்படும். உர உரிமமும் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story