செங்கத்தில், சூறாவளி காற்றுடன் பலத்த மழை
செங்கத்தில் சூறாவளி காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது.
செங்கம்,
கடந்த சில தினங்களாக செங்கம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. தொடர்ந்து சூறாவளி காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் மின்சார கம்பம் பழுது ஏற்பட்டதோடு, சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.
செங்கம் புதிய பஸ் நிலையத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வருபவர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் தடுப்புகள், பந்தல் உள்ளிட் டவைகளை அமைத்து சோதனை செய்து வந்தனர்.
இந்த தடுப்புகள், பந்தல் உள்ளிட்டவைகள் காற்றில் பறந்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story