புவனகிரி, பண்ருட்டியில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்


புவனகிரி, பண்ருட்டியில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 28 April 2020 3:30 AM IST (Updated: 28 April 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி, பண்ருட்டியில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

பண்ருட்டி,

புவனகிரி ஒன்றியம் பி.உடையூர் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புவனகிரி கூட்டமைப்பு ஊராட்சி ஒன்றியம் சார்பில் அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பி.உடையூர் ஊராட்சியில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பரசுராமன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மதியழகன், ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் அப்பா ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுகுணா, தேவி, அன்பரசன், சாரங்கபாணி, ஜெயமாலினி வேல்முருகன், முத்துகிருஷ்ணன், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேஸ்வரிகுமார் நன்றி கூறினார்.

தீர்த்தாம்பாளையம்

மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் தீர்த்தாம்பாளையம் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியார்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் குடிநீர்த்தொட்டி இயக்குபவர்களுக்கு அரிசி, காய்கறி உள்பட மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தீர்த்தாம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தீர்த்தாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், இந்திரா, தேவி ஆகியோர் கலந்து கொண்டு, 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்பட மளிகை பொருட்களை வழங்கினர். இதில் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் வசந்தா, ரவி, ராமசந்திரன், திரிபுரசுந்தரி, செல்வகுமார், தமிழ்செல்வி, நடராஜன், முருகன், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தபாபு உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

பண்ருட்டி

பண்ருட்டி ஜான் டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஜான் டூயி குழும பள்ளிகளின் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரிசி, மளிகை உள்பட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், வர்த்தக சங்க தலைவர் சண்முகம், பண்ருட்டி ரோட்டரி சங்க தலைவர் வீரப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் மணிகண்டன், ஆசிரியர்கள் கனகராஜன், மணிவாசகம், கோபாலகிருஷ்ணன், பண்ருட்டி வட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பாலு, வீரப்பன், பண்ருட்டி வட்டம் இணை ஒருங்கிணைப்பாளர் பாலு, பள்ளி இளைஞர் செஞ்சிலுவை சங்க கவுன்சிலர் சுகந்தி, பண்ருட்டி முத்தமிழ் சங்க ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா, அய்யனார், நபில் புகாரி, வேலு, அரி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தாளாளர் வீரதாஸ், முதல்வர் வாலண்டினா லெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story