ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு ‘சீல்’ வைப்பு


ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 28 April 2020 4:00 AM IST (Updated: 28 April 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு ‘சீல்’ வைப்பு.

சங்கராபுரம்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர, மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பால், மருந்து, மளிகை, காய்கறி கடைகளை தவிர, மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று ஜவுளிக்கடை ஒன்று திறக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அறிந்த தனி தாசில்தார் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் குளத்தூருக்கு விரைந்து சென்று, ஊரடங்கை மீறி திறக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

Next Story