திண்டுக்கல்லில் 2,500 ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்
திண்டுக்கல்லில் 2,500 ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்.
திண்டுக்கல்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், வருமானம் இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு தன்னார்வ அமைப்பினர், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். அதன்படி, திண்டுக்கல்லை சேர்ந்த தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் இணைந்து திண்டுக்கல்லை சேர்ந்த ஏழை மக்கள் 2,500 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, பேகம்பூரில் நேற்று நடந்தது. இதில் ஆர்.டி.ஓ. உஷா கலந்துகொண்டு, ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் தொழில் அதிபர் நாட்டாண்மை காஜா மைதீன், மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் யூசுப் அன்சாரி, தொழில் அதிபர்கள் சுகுமார், திபூர்சியஸ், போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story