மாவட்ட செய்திகள்

பழனி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவர் + "||" + A college student lying in a well near Palani

பழனி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவர்

பழனி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவர்
பழனி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவர்.
கீரனூர்,

பழனி அருகே உள்ள கோரிக்கடவு கிராமத்தை சேர்ந்தவர் காத்தசாமி. இவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 19). இவர் பழனி பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த அவர், நேற்று முன்தினம் காலை தனது கிணற்றுக்கு குளிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை கோரிக்கடவு அருகில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் கோவிந்தராஜ் பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜ் கிணற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்

1. வருகிற 21-ந்தேதி தொடக்கம்: மாணவர்கள் விரும்பிய முறையில் தேர்வு எழுதலாம் புதுவை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை
கல்லூரி தேர்வுகள் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. மாணவர்கள் விரும்பிய முறையில் தேர்வு எழுதலாம் என்று புதுவை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
2. கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு 15-ந்தேதிக்கு பிறகு இறுதி செமஸ்டர் தேர்வு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு 15-ந்தேதிக்கு பிறகு இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
3. ஒரே இடத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி, மாணவர் தற்கொலை: காதல் பிரச்சினையா? போலீசார் விசாரணை
ஒரே இடத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி, மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், காதல் பிரச்சினையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. கல்லூரி-பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் மாணவர் அமைப்பினர் கோரிக்கை மனு
கல்லூரி-பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர் அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
5. நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர் கதி என்ன?
நண்பர்களுடன் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவரை ராட்சத அலை இழுத்துச் சென்றது.