தேனி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது


தேனி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 28 April 2020 6:34 AM IST (Updated: 28 April 2020 6:34 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்,

கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினகரபாண்டியன் தலைமையில் போலீசார் மந்தை வாய்க்கால் ஓடைப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவர்கள், மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் பழங்கள், கருப்பட்டி போன்ற சாராயம் காய்ச்சும் மூலப்பொருட்கள் இருந்தது.

விசாரணையில் அவர்கள் கூடலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த அழகுராஜா (வயது 30), பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த இந்திரஜித் (30) என்பதும், மந்தை வாய்க்கால் ஓடையில் 18-ம் கால்வாய் வடக்கு கரை பகுதியில் சாராயம் காய்ச்ச ஊறல் வைத்திருப்பதும், அதற்கு மூலப்பொருள் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

கைது

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அத்துடன் இதில் தொடர்புடைய இவர்களது நண்பர்கள் கூடலூரை சேர்ந்த கலைவாணன், பிரவீன்குமார், மணிகண்டன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். இதேபோல் சாராயம் காய்ச்சி விற்றதாக தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த தங்கவேல் (35) என்பவரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கடமலைக்குண்டு போலீசார் சிறப்பாறை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த சிறப்பாறை கிராமத்தை சேர்ந்த சிவனேஷ் (29), தங்கப்பாண்டி (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story