திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க 2-ம் கட்ட ‘ஈகிள்’ சிறப்பு ரோந்துப்படை


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க 2-ம் கட்ட ‘ஈகிள்’ சிறப்பு ரோந்துப்படை
x
தினத்தந்தி 28 April 2020 9:46 AM IST (Updated: 28 April 2020 9:46 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க 2-ம் கட்ட ‘ஈகிள்’ சிறப்பு ரோந்துப்படை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. சிலர் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுகிறார்கள். அவர்களை கண்காணித்துத் தடுக்க மாவட்டத்தில் முதல் கட்டமாக 48 மோட்டார்சைக்கிள்களில் ஈகிள் சிறப்பு ரோந்துப்படை இந்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 2-ம் கட்டமாக ஊரடங்கை கண்காணிக்க மேலும் 48 மோட்டார்சைக்கிள்களில் ஈகிள் சிறப்பு ரோந்துப்படையை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தொடங்கி வைத்து, அறிவுரை வாங்கினார்.

அப்போது போலீசார் கூறுகையில், கொரோனா தொற்றை தடுக்க காவல் துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கை தீவிரமாகக் கண்காணிக்க 2-ம் கட்டமாக மீண்டும் ஈகிள் சிறப்பு ரோந்துப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சிறப்பு ரோந்துப்படை போலீசார் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும், என்றனர்.


Next Story