விழுப்புரம் நகரில் போலீசாரின் கெடுபிடியால் மக்கள் கூட்டம் குறைந்தது
விழுப்புரம் நகரில் போலீசாரின் தீவிர கட்டுப்பாட்டால் மக்கள் கூட்டம் குறைந்தது. கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் நகருக்குள் வராமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா நோய் தொற்றால் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 37 பேர் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் சார்ந்த பகுதிகளான விழுப்புரம் முத்தோப்பு, திடீர்குப்பம், அகரம்பேட்டை, கமலா நகர், கைவல்லியர் தெரு, சித்தேரிக்கரை, சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி, பானாம்பட்டு, விழுப்புரம் கே.கே.சாலை ரஹீம் லே-அவுட், பூந்தமல்லி தெரு, கந்தசாமி லே-அவுட் உள்ளிட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியே எங்கும் செல்லாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதத்திற்கு மேலானோர் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பல்வேறு கெடுபிடியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் விழுப்புரத்திற்கு வர தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் கூட்டம் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காமல் இருந்து வந்தது.
அதிரடி நடவடிக்கை
இந்நோயின் தாக்கத்தை பற்றியும், சமூக பரவலாக கொரோனா நோய் பரவுகிறது என்பதை அறியாமலும் எந்தவித கவலையும் இன்றி பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டனர். இதனால் நகரில் கொரோனா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி பிரசுரமானது.
இதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி நேற்று முதல் விழுப்புரம் நகர பகுதிக்குள் கிராமப்புற மக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வருவதை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். நகரை சுற்றிலும் ஏற்கனவே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த பகுதிகளில் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் கிராமப்புற மக்களை நகருக்குள் அனுமதிக்க மறுத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
கிராம மக்களை திருப்பி அனுப்பினர்
குறிப்பாக விழுப்புரம் ரெயில்வே மேம்பாலம், முத்தாம்பாளையம், மாம்பழப்பட்டு சாலை ரெயில்வே கேட், ஜானகிபுரம் புறவழிச்சாலை ஆகிய இடங்களில் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்கள் கிராமப்புற மக்களை தடுத்து நிறுத்தியதோடு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உங்கள் பகுதிக்கே தேடி வரும் என்று கூறி அவர்களை விழுப்புரம் நகருக்குள் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் நகரில் நேற்று முன்தினம் முதல் பழைய நடைமுறையான வண்ண அனுமதி அட்டையின்படி ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. நேற்று ஆரஞ்சு நிற அட்டை வைத்துள்ளவர்கள் மட்டும்தான் பொருட்களை வாங்க வெளியே வருகிறார்களா? என ஒவ்வொருவரையும் போலீசார் நிறுத்தி தீவிரமாக கண்காணித்து ஆரஞ்சு அட்டை வைத்திருந்த நபர்களை மட்டுமே பொருட்களை வாங்க அனுமதித்தனர். மற்றவர்களை கைது செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
வெறிச்சோடியது
போலீசாரின் கெடுபிடியால் விழுப்புரம் நகரில் நேற்று மக்கள் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. காய்கறி கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பொருட்கள் வாங்க வந்தவர்களும் சமூக இடைவெளியை பின்பற்றினர்.
இதனால் நகரில் கடந்த சில நாட்களாக திருவிழா கூட்டம் போன்று காணப்பட்ட எம்.ஜி. சாலை, பாகர்ஷா வீதிகள், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நேருஜி சாலைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் தற்போதுதான் விழுப்புரம் நகரில் ஊரடங்கு என்பது மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

Related Tags :
Next Story