ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடமாடும் ஏ.டி.எம். சேவை
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடமாடும் ஏ.டி.எம். சேவை.
புதுச்சேரி,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் அரசு வழங்கிய நிதிஉதவி, நிவாரண தொகைகளை வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் நடமாடும் வங்கி சேவையை தொடங்க புதுச்சேரி வளர்ச்சி ஆணையர் அன்பரசு வங்கி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
அதன்பேரில் புதுவை பாரதியார் கிராம வங்கி, இந்தியன் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் வழிகாட்டுதல்படி மக்களுக்கு வீடு வீடாக வங்கி பரிவர்த்தனை வழங்கும் பொருட்டு நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா புதுவை சட்டசபை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நடமாடும் ஏ.டி.எம். சேவை வாகனத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி, பாரதியார் கிராம வங்கி தலைவர் மார்க்கரேட் லெடிஷியா, பொதுமேலாளர் மோகன்குமார், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் வீரராகவன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அதிகாரி உமா குருமூர்த்தி மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story