ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த நெசவாளர்கள் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த நெசவாளர்கள் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
போளூர்,
போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் 600 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரம் நெசவுத்தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் விசைத்தறி, கைத்தறி நெசவுத்தொழில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுச் சேலை, லுங்கி ஆகியவை நெய்வதற்கு ஆரணி, ஒண்ணுபுரம் ஆகிய ஊர்களில் இருந்து நூல்களை பெற்று, கூலிக்கு நெய்து வருகின்றனர். அவர்கள், ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்து உணவுக்கே சிரமப்பட்டு வருகின்றனர்.
நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக நெசவாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்றார்.
ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்து வறுமையில் வாடும் நெசவாளர்கள் பலர் நேற்று காலை கிராமத்தில் சமூக விலகலை கடைப்பிடித்து, தட்டு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story