ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தானியங்கி முகக்கவசம் வழங்கும் எந்திரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தானியங்கி முகக்கவசம் வழங்கும் எந்திரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோள்படி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தானியங்கி முகக் கவசம் வழங்கும் எந்திரம் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்த எந்திரத்தில் 5 ரூபாய் நாணயத்தைச் செலுத்தினால் ஒரு முகக் கவசத்தைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த எந்திரத்தை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று மாலை பொத்தானை அழுத்தி முகக் கவசம் வழங்குவதைத் தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story