மாவட்டத்தில் இடி- மின்னலுடன் பரவலாக மழை நெற்பயிர்கள் சேதம்
விழுப்புரம் மாவட்டத்தில் இடி- மின்னலுடன் பரவலாக மழை பெய்ததால் நெற்பயிர்கள் சேதமானது.
மேல்மலையனூர்,
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் வெயிலின் தாக்கம் பல்வேறு இடங்களில் அதிகமாக இருந்தது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் பதிவானது. வெயிலுக்கு இதமாக அவ்வப்போது கோடை மழையும் பெய்து சற்று சூட்டை தணித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்ப சலனம், மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பலத்த காற்றுடனும், இடி- மின்னலுடனும் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இடி-மின்னலுடன் மழை
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.நேற்று காலை 6 மணியில் இருந்து விழுப்புரம் நகரில் பலத்த காற்று வீசத்தொடங்கியது. காலை 7 மணி முதல் திடீரென சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 20 நிமிடத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. அதன் பிறகு பலத்த மழை ஓய்ந்த நிலையில் சாரல் மழையாக காலை 9.30 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது.
இந்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவினால் வீட்டிற்குள்ளேயே பொதுமக்கள் முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியே வந்தவர்கள் குடைபிடித்தபடி கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கினர்.
கோவில் மேற்கூரை இடிந்தது
மேலும் இந்த மழையினால் நகராட்சி பள்ளி மைதானம் சேறும், சகதியுமாக மாறியதால் அங்கு செயல்பட்டு வந்த தற்காலிக உழவர் சந்தையில் விவசாயிகள், காய்கறிகளை விற்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
அதேபோல் விழுப்புரம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி வியாபாரிகளும் குடை பிடித்தபடி வியாபாரம் செய்தனர். இருந்தாலும் மழையின் காரணமாக பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வராததால் காய்கறி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதன் காரணமாக காய்கறி வியாபாரம் சற்று பாதிக்கப்பட்டது.
மேலும் விழுப்புரத்தை சுற்றியுள்ள காணை பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக காணை மெயின்ரோட்டில் உள்ள பழமைவாய்ந்த சனீஸ்வரன் கோவிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
நெய்பயிர்கள் சேதம்
இதேபோல் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை மேல்மலையனூர் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த சூறைக்காற்றுடன் பெய்த இந்த மழை காரணமாக சாத்தாம்பாடி, அவலூர்பேட்டை போன்ற கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெய்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்தன. லட்சக்கணக்கில் செலவு செய்து பராமரித்து வந்த நெற்பயிர்கள் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சேதமடைந்ததை எண்ணி விவசாயிகள் வேதனையடைந்ததோடு, நிலத்தில் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றினர்.
இதேபோல் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, திண்டிவனம், மயிலம், பிரம்மதேசம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கத்தின் பிடியில் இருந்த மக்களுக்கு வருணபகவான் கருணை காட்டியுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story